எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முண்டியடிக்கும் மக்கள்!! - Yarl Thinakkural

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முண்டியடிக்கும் மக்கள்!!

அமெரிக்க - ஈரான் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு  ஏற்படலாம் என்ற நிலையில் தற்போது எரிபொருள் நிலையங்களுக்கு மக்கள் முண்டியடித்துக் கொண்டு செல்வதை காணக்கூடியதாக உள்ளது.

நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று வரைக்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து எரிபெருள் நிலையங்களிலும் அதிகளவான மக்கள் எரிபெருளை பெற்றுக் கொள்வதற்காக முன்யடித்துக் கொண்டு சென்றுள்ளனர்.

இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ள பகுதிகள் மற்றும் வீதிகளில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Previous Post Next Post