யாழ் பெரிய கடை சந்தை பிரச்சினைகள்!! -நேரில் ஆராய்ந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி- - Yarl Thinakkural

யாழ் பெரிய கடை சந்தை பிரச்சினைகள்!! -நேரில் ஆராய்ந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி-

யாழ் பெரிய கடை சந்தை வியாபாரிகளின் அழைப்பை ஏற்று அங்கு சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அவர்களின் தற்கால பிரச்சினை தொடர்பில் கேட்டறிந்தனர்.

இதன்போது தமது பிரச்சனைகள் தொடர்பாக மாநகர சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பேச வேண்டும் என்றும் வியாபாரிகள் கேரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ,சிவகந்தன் தனூஜன், மகேந்திரன் மயூரன் கட்சி உறுப்பினர் கள் திரு. வீரசிங்கம், கனகசபை விஷ்ணுகாந் , பத்மநாதன் என பலரும் குறித்த சந்தை பகுதிக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post