பண்ணை உணவகத்திற்குள் புகுந்து மூர்க்கத் தாக்குதல்!! -பணியாளரின் நிலை கவலைக்கிடம்- - Yarl Thinakkural

பண்ணை உணவகத்திற்குள் புகுந்து மூர்க்கத் தாக்குதல்!! -பணியாளரின் நிலை கவலைக்கிடம்-

யாழ்.பண்ணையில் அமைந்துள்ள உணவகத்திற்குள் புகுந்த இனந்தெரியாத குழுவினர் நடத்திய மூர்க்கத் தாக்குதலில் உணவகப் பணியாளர் படுகாயமைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இரவு மூடப்பட்டிருந்த விடுதியை திறந்து ஐஸ்கிறீம் மற்றும் பணம் வைக்கும் லாச்சித் திறப்பைப்  கேட்டு தாக்குதல் மேற்கொண்டதாக பணியாளர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த பணியாளர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகின்றார்.

இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகாமையில் இராணுவ அதிரடிப்படையினரின் முகாம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Previous Post Next Post