பருத்தித்துறை கடலில் நீராடியவர் சுழியில் சிக்கி சாவு!! - Yarl Thinakkural

பருத்தித்துறை கடலில் நீராடியவர் சுழியில் சிக்கி சாவு!!

பருத்தித்துறை முனை கடலில் நீராடிக்  கொண்டிருந்தவர் சுழியில் சிக்கி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி பன்னங்கண்டியைச் சேர்ந்த இராமசாமி மாணிக்கராசா (வயது-36) என்பவரே இவ்வாறு உயிழந்தார்.

இறுதிச் சடங்கு ஒன்றுக்கு சென்ற அவர் பருத்தித்துறை முனைக் கடலில் நீராடிய வேளை கடல் சுழியால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார் என்று பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
Previous Post Next Post