ரயிலுடன் சிக்கிக் கொண்டது ட்ரைக்டர்!! -தெல்லிப்பளையில் சம்பவம்- - Yarl Thinakkural

ரயிலுடன் சிக்கிக் கொண்டது ட்ரைக்டர்!! -தெல்லிப்பளையில் சம்பவம்-

தெல்லிப்பளையில் உழவு இயந்திரத்தை தொடருந்து மோதித் தள்ளியதில் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை ரயில் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட அதிவேக தொடருந்துடன் தெல்லிப்பளை மாவிட்டபுரம் பகுதியில் ரயில்வே கடவை ஊடாக கடக்க முற்பட்ட உழவு இயந்திரம் இவ்வாறு விபத்தில் சிக்கிக் கொண்டது.
Previous Post Next Post