பிள்ளையார் கதை விரத்தில் தீர்த்தமாடிய இளைஞர் நீரில் மூழ்கி பலி!! -சோகத்தில் முடிந்த திருவிழா- - Yarl Thinakkural

பிள்ளையார் கதை விரத்தில் தீர்த்தமாடிய இளைஞர் நீரில் மூழ்கி பலி!! -சோகத்தில் முடிந்த திருவிழா-

பிள்ளையார் கதை விரதத்தை முடிப்பதற்காக தீர்த்தமாட தீர்த்த குளத்தில் இறங்கிய இளைஞர் நீரில் மூழ்கி உரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா ஈச்சங்குளம் பிள்ளையார் ஆலயத்தின் பிள்ளையார் கதை தீர்த்தமாடல் நிகழ்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வின் இறுதியில் ஊர்மக்கள் கூடி தவசியாகுளம் தீர்தக்குளத்தில் கொடிக்கம்பம் நாட்டி தீர்த்தமாடும் நிகழ்வு மரபுரீதியில் பாரம்பரியமாக நடைபெறும்.

அந்த வகையில் இன்று வழமைபோல ஊர்மக்கள் கூடி தீர்த்தமாடச் சென்றனர்.

இதன்போதே ஈச்சங்குளத்தைச் சேர்ந்த ரெட்னநாதன் துஸ்யந்தன் (வயது-27) என்ற இளைஞன் தாமரைக் கொடியில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளார்.

அவரை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்த ஊர்மக்கள், சுமார் 20 நிமிடம் போராடி இளைஞரை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post