மது போதையில் குழந்தையைத் தூக்கி ஏறிந்த நபர்!! -நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு- - Yarl Thinakkural

மது போதையில் குழந்தையைத் தூக்கி ஏறிந்த நபர்!! -நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு-

மது போதையில் குழந்தையை தூக்கி ஏறிந்த நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ் தீவகம் ஊர்காவற்றுறை சின்னமாடு, மூன்றாம் வட்டாரப் பகுதியை நடந்த குறித்த சம்பத்தில் அதே இடத்தை சேர்ந்த நபருக்கே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனது உறவினர் வீட்டுக்கு மதுபோதையில் சென்ற நபர் ஒருவர், அங்கு உறங்கிக்கொண்டிருந்த குழந்தையை தூக்கியுள்ளார். அதை அவதானித்த உறவினர்கள், குறித்த நபரை ஏசியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த குறித்த நபர், குழந்தையைத் தூக்கி வீசி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதனால் காயமடைந்த குழந்தை, ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய நபர், ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post