யாழ்.பல்கலை சிங்கள மாணவர்கள் மறைத்து வைத்திருந்த வாள்!! -பொலிஸ் முற்றுகையில் மீட்பு- - Yarl Thinakkural

யாழ்.பல்கலை சிங்கள மாணவர்கள் மறைத்து வைத்திருந்த வாள்!! -பொலிஸ் முற்றுகையில் மீட்பு-

யாழ் பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் தங்கியிருக்கு வீட்டின் அறையின் மேல் தளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள் மீட்கப்பட்டுள்ளது.

இருப்பினும் குறித்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் இன்று காலை இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்கள் பலர் அந்த வீட்டில் தங்கியிலுள்ளனர். அந்த வீட்டின் மேற்தளத்தில் வாள் ஒன்று இருப்பதாக வீட்டு உரிமையாளரால் தகவல் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் அந்த வாள் மீட்கப்பட்டது. எனினும் அதுபற்றித் தமக்குத் தெரியாது என அங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் தெரிவித்தனர். விசாரணைகள் இடம்பெறுகின்றன” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, வாள் மீட்கப்பட்ட வீட்டில் கடந்த ஆண்டு சிங்கள மாணவர்களுக்கு இடையே மோதல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post