யாழிலுள்ள சமய தலைவர்களை சந்தித்த வடக்கு ஆளுநர் சார்ள்ஸ் - Yarl Thinakkural

யாழிலுள்ள சமய தலைவர்களை சந்தித்த வடக்கு ஆளுநர் சார்ள்ஸ்

வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் யாழில் உள்ள மதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்படி நேற்று நல்லை ஆதீன குருமுதல்வர், யாழ்ப்பாணம் நாக விகாரை விகாராதிபதி மற்றும் இஸ்லாமிய மௌவி ஆகியோரை சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.

வடக்கு மாகாணத்தின் நிலமைகள் தொடர்பில் மதத் தலைவர்களிடம் கேட்டறிந்த ஆளுநர், தன்னால் முன்னெடுக்க எதிர்பார்த்திருக்கும் பணிகளை அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் யாழ் மறைமாவட்ட ஆயரை நேற்று முன்தினம் சந்தித்து ஆசி பெற்று கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post