ரஞ்சனின் பாலியல் ரீதியான உரையாடல்!! -சிக்கப்போகும் முக்கிய பெண் பிரமுகர்கள்- - Yarl Thinakkural

ரஞ்சனின் பாலியல் ரீதியான உரையாடல்!! -சிக்கப்போகும் முக்கிய பெண் பிரமுகர்கள்-

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளை வெளியிடுவதை ஆளும் கட்சி முக்கியஸ்தர்கள் நிறுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாதிவெல பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் வைத்து ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் கைது செய்யப்படும் போது அங்கிருந்து இறுவெட்டுகள் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட இறுவெட்டுக்களிலுள்ள முக்கிய குரல் பதிவுகள் அடுத்தடுத்து வெளியாகி இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன.

முக்கிய பிரமுகர்களாக இருக்கும் பல பெண்கள், ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசி ஊடாக பாலியல் தொடர்புகளை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் குரல் பதிவுகள் கிடைத்துள்ளமை காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பெண்களில் மக்கள் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் பிரபலமானவர்களின் மனைவிமார், தனியார், அரச நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் பிரபல பெண் கலைஞர்களும் உள்ளடங்குவதாக கூறப்படுகின்றது.

குறித்த குரல்பதிவுகள் வெளியானால் எதிர் மற்றும் ஆளும் தரப்பினைச் சேர்ந்த பலரும் பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக ஆளும் தரப்பினைச் சேர்ந்த பலரும் பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்பதனால் அவற்றை வெளியிடாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Previous Post Next Post