குடும்பச் சண்டையை தடுக்கச் சென்ற இராணுவச் சிப்பாய்!! -தம்பதியரின் தாக்குதலில் பரிதாப பலி- - Yarl Thinakkural

குடும்பச் சண்டையை தடுக்கச் சென்ற இராணுவச் சிப்பாய்!! -தம்பதியரின் தாக்குதலில் பரிதாப பலி-

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்பச் சண்டையை தடுக்கச் சென்ற இராணுவச் சிப்பாய் இருவரின் தாக்குதலுக்கு உள்ளாகி பரிதாபகர தாக்குதலில் உயிரிழந்துள்ளார் என்று அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பலாங்கொடை கூலிகொட வில்லிகொட பகுதியில் நண்பர் ஒருவர் அவரது மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட போது, இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்த போதே மேற்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 21 வயதுடைய விஜயபா இராணுவ முகாமில் கடமையாற்றும் சிப்பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
Previous Post Next Post