வெளிநாட்டு கணவன் போட்ட 30 லட்சம் டீல்!! -கழுத்தறித்தறுக்கப்பட்ட மனைவி- - Yarl Thinakkural

வெளிநாட்டு கணவன் போட்ட 30 லட்சம் டீல்!! -கழுத்தறித்தறுக்கப்பட்ட மனைவி-

காலி - உனவட்டுன பகுதியிலுள்ள மித்தோன் ஹவுஸ் என்னும் சுற்றுலா விடுதியின் உரிமையாளரான ஒரு பிள்ளையின் தாயொருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடுதியின் உரிமையாளரான ககே கங்கானம்கே திலுகா சாமலி விலாசிதா என்ற 34 வயதான ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு உந்துருளி ஒன்றில் வந்த 2 நபர்கள் குறித்த பெண்ணை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது 7 வயது மகனுடன் விடுதியின் உணவகத்திற்குள் இருக்கும் போது நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

மேற்படி பெண்ணை கொலை செய்வதற்கு கடந்தாண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இத்தாலியிலுள்ள குறித்த பெண்ணின் கணவரே கொலை செய்வதற்காக இரண்டு நபர்களுடன் கடந்த ஆண்டும் 30 லட்சம் ரூபா பேரம் பேசி வழங்கப்பட்டமை தெரியவந்ததையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே இந்த ஆண்டும் குறித்த பெண்ணை அவரது கணவரே கொலை செய்வதற்கு ஆட்களை அனுப்பியிருப்பார் என்ற சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் தற்போது வரை கொலைச் சந்தேக நபர்கள் கைதாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post