மாநகர சபையால் கைவிடப்பட்ட பழைய பூங்கா!! -பயன்படுத்த முடியாத நிலையில் விளையாட்டு உபகரணங்கள்- - Yarl Thinakkural

மாநகர சபையால் கைவிடப்பட்ட பழைய பூங்கா!! -பயன்படுத்த முடியாத நிலையில் விளையாட்டு உபகரணங்கள்-

யாழ்.மாநகர சபைக்குச் சொந்தமான பழைய புங்கா வளாகத்திற்குள் உள்ள சிறுவர் பூங்கா எந்தவிதமான பராமரிப்பும் இல்லாமல் கைவிடப்பட்ட நிலையில் உள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் சில பழுதடைந்தும், உடைந்தும் காணப்படுவதுடன், மழை வெள்ளத்தாலும் புங்கா நிரம்பியுள்ளதால் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்பட்டுள்ளது என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது அப்போது கடமையில் இருந்த வடக்கு ஆளுநராக பணியாற்றிய ஜி.ஏ.சந்தரசிறி மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் வழிநடத்தலில் பழைய பூங்கா வளாகத்திற்குள் சிறுவர் பூங்க அமைக்கப்பட்டது.

18 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட குறித்த சிறுவர் பூங்காவினை அப்போது பொருளாதா அபிவிருத்தி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ச திறந்து வைத்தார். குறித்த புங்காவின் பராமரிப்பு யாழ்.மாநகர சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.

மாநகர சபை ஆணையாளரின் கீழ் இயங்கி வந்த காலப்பகுதியில் புங்காவின் பராமரிப்பு ஓரளவு நேர்த்தியாக மேற்கொள்ளப்பட்டுவந்த போதும், தற்போது சபை நிர்வாகம் முதல்வரின் கீழ் கொண்டுவரப்பட்ட நிலையில் உரிய பராமரிப்பு மேற்கொள்ளப்படவில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பூங்கா பராமரிப்பு தொடர்பில் முதல்வர் உரிய கவனம் செலுத்தி, மீண்டும் பூங்காவினை செயற்பட இடமளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post