கோட்டாவிற்கு எதிராக யாழில் போராட்டம்!! - Yarl Thinakkural

கோட்டாவிற்கு எதிராக யாழில் போராட்டம்!!

வடக்கில் நடக்கம் சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராக யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணிக்கு கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது.

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஐபக்ச மணல் வழித்தட அனுமதியை இரத்துச் செய்துள்ளதைத் தொடர்ந்து யாழ்.மாவட்டத்தின் தீவகம், அரியாலை, வடமராட்சி கிழக்கு உட்பட பல இடங்களிலும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் அளவுக்கு அதிகமாக நடைபெற்று வருகின்றன.

மேலும் வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களிலும் இந்த சட்டவிரோத மணல் அகழ்வுகள் நடந்து வருகின்றன. இதனால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுவதாக பல தரப்பினர்களும் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருவதுடன் இதனைக் கட்டப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உரிய நடவடிக்கைளை எடுக்க வலியுறுத்தியும் பல தரப்புக்கள் இணைந்து போராட்டமொன்று இன்றைய தினம் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post