சுழிக்குள் சிக்குண்டு மீனவர் பலி!! -யாழ் குருநகரில் சம்பவம்- - Yarl Thinakkural

சுழிக்குள் சிக்குண்டு மீனவர் பலி!! -யாழ் குருநகரில் சம்பவம்-

யாழ்.குருநகர் டலில் சுழிக்குள் சிக்குண்டு மீனவர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

குறித்த பகுதியில் இன்று புதன்கிழமை காலை நடந்த இச் சம்பவத்தில் சாவக்காட்டு பகுதியைச் சேர்ந்த வடிவேல் வரதன் (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மீனவர் Nமுலும் 6 மீனவர்களுடன் வழமை போன்று இன்று கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இதன் போது கடலில் சுழிஓடிக் கொண்டு வலை வீசிய போது அவரை சுழி இழுத்துச் சென்றுள்ளது.

சுழி இழுத்துச் சென்றவரை சக மீனவர்கள் தேடிய போதும் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் தற்போது பிரதேச பரிசோதணைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post