மல்லாகம் நலன்புரி நிலையத்திற்குச் சென்ற தொண்டைமான்!! - Yarl Thinakkural

மல்லாகம் நலன்புரி நிலையத்திற்குச் சென்ற தொண்டைமான்!!

வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து மல்லாகம் நீதவான் நலன்புரி நிலையத்தில் வசிக்கும் மக்களை சமுதாய வலுவூட்டல்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நேரடியாக சென்று சந்தித்துள்ளார்.

யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுடன் அங்கு சென்ற அமைச்சர் குறித்த முகாமில் வாழும் 53 குடும்பங்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வுகளை செய்திருந்தார்.
Previous Post Next Post