விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லதே!! -இரா.சம்பந்தன்- - Yarl Thinakkural

விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லதே!! -இரா.சம்பந்தன்-

தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டமை நல்ல விடயமாக இருக்கலாம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

இன்று இலங்கை தமிழரசு கட்சியின் 70 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறுயுள்ளார்.

இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டமை நல்ல விடயமாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களுடைய பிரச்சினை அத்துடன் முடிவடையவில்லை. தமிழ் மக்கள் இலங்கை தீவில் இரண்டாம் தர பிரஜைகளாக கணிக்கப்படுகின்றார்கள். அது ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ் மக்களுக்கு சமத்துவத்தின் அடிப்படையில் அரசியல் தீர்வு கொடுக்கப்பட வேண்டியது அவசியம்.

தமிழீழ விடுதலைப் புலிகளை அளிப்பதற்கு இந்திய உட்பட சர்வதேசத்தில் பல நாடுகள் உதவி புரிந்தார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்பு நாங்கள் நியாயமான நிரந்தர அரசியல் தீர்வை காண்பதான ஒரு நிபந்தனையின் அடிப்படையில் புலிகளை அழிக்க அவர்கள் உதவினார்கள்.

தற்பொழுது அந்த வாக்குறுதிகளில் இருந்து தப்பிக்க முனைகின்றார்கள். அதற்க்கு சர்வதேச சமூகம் இடமளிக்கக்கூடாது. சர்வதேச சமூகம் அதற்க்கு இடமளித்தால் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்க்கு உதவுவதாகத்தான் அர்த்தம் பெறும். அந்த நிலமை இருக்க கூடாது.

உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஜக்கிய நாடுகள் சபையின் தீர்மாணங்களுக்கு ஏற்ப்ப சிவில் அரசில், பொருளாதார, சமூக, கலாசர உரிமைகளின் அடிப்படையில் அந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை வேண்டும்.

அது மறுக்கப்பட்டால் வெளியக சுயநிர்ணய உருமை வேண்டும். இதை சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும். நாங்கள் எவரையும் பகைக்கவோ, மோதவோ இல்லை. என்றுமே நாங்கள் எவரையும் பகைக்கவில்லை. இன்றும் யாரையும் நாம் பகைக்க மாட்டோம். ஆனாம் தமிழ் மக்களின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றார்.Previous Post Next Post