ஜனாதிபதி தேர்தலில் கோதாபய ராஜபக்ஷவிற்கு தமிழ் மக்கள் பெரும்பான்மையினர் வாக்களிக்காதமைக்கு ஊடகங்களே முக்கிய காரணம் என்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
தமிழ் ஊடகங்கள் தமிழ் மக்களுக்கு சாபக்கேடு என்றும் அவர் கடுமையாகச் சாடினார். என்மீது சேறு பூசும் வகையில் செய்தி வெளியிடுவோருக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
யாழ்.ஸ்ரான்லி வீதியில் உள்ள ஈ.பி.டி.பி கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போதே ஊடகங்கள் மீது அவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
சில ஊடகங்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளேன். சிலதை மறந்து விட்டுள்ளேன். நான் சொல்லாதவற்றை எழுதினால் வழக்கு தொடர வேண்டி வரும். அல்லது என்மீது சேறு பூசும் வகையில் செய்தி எழுதினாலும் வழக்கு தொடருவேன்.
சில வழக்குகள் தொடர்பில் பொலிஸார் என்னிடத்தில் வாக்குமூலம் கேட்டுள்ளார்கள். அந்த வாக்குமூலங்களை வழங்க உள்ளேன் எனவும் அவர் கூறினார்.