யாழ் நகரில் ஒலித்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல்!! -சம்பவ இடத்தில் குவிந்த பொலிஸார்- - Yarl Thinakkural

யாழ் நகரில் ஒலித்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல்!! -சம்பவ இடத்தில் குவிந்த பொலிஸார்-

யாழ் நகரப் பகுதியில் பெரும் சத்தத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல் ஒலிபரப்பப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-

யாழ் நகர் பகுதியில் இரவு வேளை இயங்கும் உணவகம் ஒன்றில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல் ஒலிபரப்பப்பட்டுள்ளது.

இதனை அவதானித்த எவரோ பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து யாழப்பாணம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

இருப்பினும் அவ்வாறான பாடல் எங்கும் ஒலிக்கப்படாததால் ஏமாற்றத்துடன் பொலிஸார் திரும்பிச் சென்றனர்.
Previous Post Next Post