யாழ் மாநகர சபையின் பாதீடு வாக்கெடுப்பில் மீண்டும் தோல்வி!! - Yarl Thinakkural

யாழ் மாநகர சபையின் பாதீடு வாக்கெடுப்பில் மீண்டும் தோல்வி!!

யாழ் மாநகர சபை வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் சபை உறுப்பினர்களின் வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டுக்கான யாழ் மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் கடந்த சபை அமர்வின் போது முதல்வர் இமானுவேல் ஆனல்டினால் சபையில் சமர்பிக்கப்பட்டது. அது தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்த உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்தை தோற்கடித்தனர்.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை திருத்தம் செய்யப்பட்ட வரவுசெலவு திட்டம் மீண்டும் சபையில் சமர்பிக்கப்பட்டது.

இதன் போது தம்மால் முன்வைக்கப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யப்படாமல் குறித்த வரவுசெலவு திட்டம் சமர்பிக்கப்பட்டுள்ளது என்று கூறி உறுப்பினர்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனாம் வரவுசெலவு திட்டம் சபை உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பிற்க்கு விடப்பட்டது. தன் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினர்கள் அடங்கலாக 24 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் அடங்கலாக 19 பேர் வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post