யாழிற்கு புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர்!! - Yarl Thinakkural

யாழிற்கு புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர்!!

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ் சேனாரத்ன தனது பணிகளை உத்தியோகபூர்வமான இன்று திங்கட்கிழமை ஆரம்பித்தார்.

யாhழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளை இன்று திங்கட்கிழமை முற்பகல் 11.15 மணியளவில் பொறுப்பேற்றார்.

புதிதாக யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட மகேஸ் சேனாரத்ன இதுவரை காலமும் பொலிஸ் தலைமையக்கதில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு மையத்தின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றியிருந்தார்.

மேலும் இதுவரை காலமும் யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக பணியாற்றிய ராஜித, பிரதமரின் பாதுகாப்புப் பிரிவுக்கு மாற்றலாகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post