கட்டைக்காட்டில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!! -ஆபத்தில் சிக்கிய இரு குடும்பங்கள்- - Yarl Thinakkural

கட்டைக்காட்டில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!! -ஆபத்தில் சிக்கிய இரு குடும்பங்கள்-

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக கட்டைக்காடு மக்களும் பெருமளவு பாதிப்புக்களை எதிர் கொண்டுள்ளனர்.

பெரியகுளம் நிறைவு மட்டத்தை அடைந்துள்ளமையால் அதிலிருந்து வெளியேறும் வெள்ள நீர் வீடுகளிற்குள் சென்றுள்ளது. அதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் வெள்ள நீர் வீடுகளிற்குள் உட்புகுந்த நிலையில் வாழும் குடும்பங்களை சந்தித்தார். அங்கு காணப்படும் வெள்ள நீர் வெளியேறும் வரை அவர்களை கட்டைக்காடு அ.த.க. பாடசாலையில் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்ததார்.

பாதிக்கப்பட்ட குறித்த இரு குடும்பங்களிற்குமான உணவு, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் கண்டாவளை பிரதேச செயலாளர் மேற்கொண்டுள்ளார்.

அதேவேளை குறித்த பகுதியில் வட்டக்கச்சி செல்லம் பிரதான வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வீதியை குறுக்கெடுத்து வெள்ள நீர் பாய்வதனால் மக்கள் போக்குவரத்து செய்வதில் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர்.
Previous Post Next Post