நரிக்குண்டு குளத்தில் மருத்துவ கழிவுகள்!! -டெங்கு ஒழிப்பில் வெளிவந்த ஆதாரங்கள்- - Yarl Thinakkural

நரிக்குண்டு குளத்தில் மருத்துவ கழிவுகள்!! -டெங்கு ஒழிப்பில் வெளிவந்த ஆதாரங்கள்-

யாழ்.பிறவுண் வீதி நரிக்குண்டு குளத்திற்குள் வேண்டுமென்றே மருத்துவ கழிவுகள் வீசப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த பகுதிக்கு மிக அருகில் உள்ள சிறிய தனியார் மருத்துவ மனைகளின் கழிவுகளாக அது இருக்கலாம் என்று தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் அங்கு மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழைக்காலத்தை அடுத்து யாழ்ப்பாணத்திலும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் குடாநாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி குளத்தை அண்டியுள்ள பகுதியை சேர்ந்தவர்கள், தன்னார்வாளர்கள், இளைஞர்கள் ஆகியோர் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை குளத்தினை சுற்றி வீசப்பட்ட கழிவு பொருள்கள், சுற்றியுள்ள பற்றைகள் என்பவற்றை அப்புறப்படுத்தினார்கள்.

அதன் போது மருத்துவ கழிவுகள் அடங்கிய பைகள் அவ்விடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. அதனுள் பாவித்த ஊசிகள் (சிரிஞ்) மருந்து போத்தல்கள் என்பன காணப்பட்டுள்ளன. அவை அருகில் உள்ள தனியார் மருத்துவ மனை கழிவுகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 
Previous Post Next Post