ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபாயவிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விட்டது சரியான முடிவு என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
ஜனாதிபதி தன்னுடைய அரசியல் தத்துவத்தை வெளிப்படுத்தி வருகின்றார். அதிகார பகிர்வு தொடர்பில் அவர் சொல்லும் கருத்துக்கள் நமது மக்கள் அவருக்கு வாக்களிக்காம விட்டது சரி என்பது தெளிவாகின்றது.
நாட்டின் அதிகாரம் ஒரே இடத்தில் இருந்தால் அது பெரும்பான்மையானவர்களுக்கே நன்மை. அரசியல் தீர்வு விடயத்தில் சிறுபான்மையினர் எதனை விரும்புகின்றார்களோ அதனையே கொடுக்க வேண்டும். அதன் ஊடாகவே சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க முடியும்.
சிறுபான்மையினரை அடக்கியாள ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். அதேவேளை எம்மை அடக்கியாள முனையும் அரசுக்கு ஆதரவு தெரிவிப்போருக்கும் எமது கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.