பெண்ணை உயிருடன் தீயிட்டு எரிக்க முயட்சி!! -பாலியல் குற்றத்தை வெளிப்படுத்தியவருக்கு பயங்கம்- - Yarl Thinakkural

பெண்ணை உயிருடன் தீயிட்டு எரிக்க முயட்சி!! -பாலியல் குற்றத்தை வெளிப்படுத்தியவருக்கு பயங்கம்-

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட  23 வயது பெண்ணை அவரது கிராமத்தை சேர்ந்தவர்களே உயிருடன் தீ மூட்டி எரிக்க முயன்ற சம்பவம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது.

உத்தரபிரதேசத்தின் உனாவோ மாவட்டத்தை சேர்ந்த பெண்ணே அந்த ஆபத்தை சந்தித்துள்ளார்.

பாலியல் வன்முறை குறித்த விசாரணைக்காக நீதிமன்றம் சென்றுகொண்டிருந்தவேளை அவரது கிராமத்தை சேர்ந்த ஐவர் அவரை உயிருடன் எரித்து கொலை செய்ய முயன்றனர், பெருமளவு எரிகாயங்களுடன் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பாலியல்வன்முறை குற்றச்சாட்டிற்கு உள்ளானவர் உட்பட 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட பெண் கடந்தமார்ச் மாதம் தனது கிராமத்தை சேர்ந்தவர்கள் மூவர் தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய பின்னர் வீடியோ எடுத்ததாக முறைப்பாடு செய்திருந்தார்.

இதனை தொடர்ந்து குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான மூவரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுலை செய்யப்பட்டார்.

காவல்துறையினரிடம் சிக்காமல் தப்பியோடி நபரே இன்று பாதிக்கப்பட்ட பெண்ணை உயிருடன் எரிக்க முயன்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Previous Post Next Post