செம்மணி இந்து மயானத்தில் சிரமதானம்!! -தூய்மையைப் பேணுவோம் செயற்றிட்டத்தின் கீழ் முன்னெடுப்பு- - Yarl Thinakkural

செம்மணி இந்து மயானத்தில் சிரமதானம்!! -தூய்மையைப் பேணுவோம் செயற்றிட்டத்தின் கீழ் முன்னெடுப்பு-

பிரதேசத்தின் தூய்மையைப்பேணுவோம் எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக செம்மணி இந்துமயானத்தில் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் ஆதரவு மையத்தின் அனுசரணையுடன் இருபாலை தெற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இவ் சிரமதானபணிகள் நடத்தப்பட்டது.

இருபாலைதெற்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பா.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் செம்மணி இந்துமயான சபையின் தலைவர் லயன்.சி.லட்சுமிகாந்தன்,வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினர் நடேசபிள்ளை கஜேந்திரகுமார் பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட  பிரதேச இளைஞர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிரமதான பணியில் ஈடுபட்டனர்.

இவ் சிரமதான பணியில் வலி கிழக்கு  பிரதேச சபையின் ஊழியர்கள் உழவு இயந்திரம் மூலம் குப்பைகளை அகற்றியதுடன்,புல்லுவெட்டும் இயந்திரங்களை பயன்படுத்தி வளாகத்தை துப்பரவு செய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.

ஆரம்ப கட்டமாக இறுதி சடங்குகள் செய்ய கூடிய வகையில் செம்மணி  இந்துமயானத்தின் முக்கிய பகுதிகள் துப்பரவு செய்யப்பட்டுள்ளதுடன் ஏணைய பகுதிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ள  சிரமதான பணிகள் மூலம் துப்பரவு செய்யபடும் என வலி கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் ந.கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
Previous Post Next Post