இராணுவ சிப்பாயின் கழுத்தை அறுத்து துப்பாக்கி பறிப்பு!! -வவுனியாவில் பதற்றம்- - Yarl Thinakkural

இராணுவ சிப்பாயின் கழுத்தை அறுத்து துப்பாக்கி பறிப்பு!! -வவுனியாவில் பதற்றம்-

இராணுவ படை முகாமில் கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் கழுத்தை அறுத்து அவரிடமிருந்த துப்பாக்கி கொள்ளையிடப்பட்டுள்ளது.

வவுனியா, போகஸ்வேவ பகுதியில் உள்ள படைமுகாமிலேயே மேற்படிச் சம்பவம் நடந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் தொண்டை பகுதியில் காயமடைந்த இராணுவ சிப்பாய் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை இராணுவத்தினரும், பொலிஸாரும் முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post