கிளிநொச்சியில் கோர விபத்து!! -முதியவர் பரிதாப பலி- - Yarl Thinakkural

கிளிநொச்சியில் கோர விபத்து!! -முதியவர் பரிதாப பலி-

கிளிநொச்சி 55 ஆம் கட்டையில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த கோர விபத்தில் முரியவர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

ஹயஸ் வாகனமும் துவிச்சக்கர வண்டியும் மோதியே மேற்படி விபத்து நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேராக மோதிய விபத்தில் துவிச்சக்கர வண்டியின் மீது  ஹயஸ் வாகனம் ஏறிச் சென்றுள்ளது.

இதன் போது ஹயஸ் வாகனத்தின் முன் பக்க கண்ணாடியில் முதியவலின் தலை மோதியுள்ளது.

காயமடைந்த அவர் வைத்திய சாலையில் சேர்க்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளார்.
Previous Post Next Post