லைசன்ஸிற்கான மொடிக்கல் ரிப்போட் இனி துரித கதியில்!! -அங்கஜன் எம்.பி நடவடிக்கை- - Yarl Thinakkural

லைசன்ஸிற்கான மொடிக்கல் ரிப்போட் இனி துரித கதியில்!! -அங்கஜன் எம்.பி நடவடிக்கை-

யாழ்ப்பாணத்தில் சாரதி அனுமதி பத்திரத்திரம் பெறுபவர்கள் தமக்கான மருத்துவ சான்றிதழை வெறுபதில் எதிர் கொண்ட நெருக்கடிகளை பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தீர்த்து வைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்திற்கு அருகில் உள்ள மருத்துவ சான்றிதழ் வழங்கும் இடத்திற்கு இன்று வியாழக்கிழமை காலை நேரில் சென்ற பாராளுமன்ற  உறுப்பினர் அங்குள்ள நிலமைகளை ஆராய்ந்ததுடன், மருத்துவ சான்றிதழ் வழங்குவதை சுலபமாக்குவதற்கான நடவடிக்கைகைளை மேற்கொண்டார்.

இந்த நடவடிக்கை தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்:-
யாழில் மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு பலர் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தனர். இது தொடர்பில் எனக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனடிப்படையில் இன்று காலை மருத்துவ சான்றிதழ் வழங்கும் இடத்திற்கு சென்று நிலமைகளை ஆராய்ந்துள்ளேன். நாமும் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இன்று மாலை மருத்துவ சான்றிதழ் வழங்கும் பரீட்சார்த்த நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளோம்.

இந்த நடவடிக்கையினை மருத்துவ சத்தியமூர்த்தி போன்ற அதிகாரிகள் உள்ளடங்கிய குழு மேற்கொள்ளவுள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவ சான்றிதழ் பெறுபவர்கள் வரிசையில் நிற்கவேண்டியதில்லை.

தேவையான விண்ணப்ப படிவங்களை பெறலாம், அதற்கு திகதி கொடுக்கப்படும் அந்த திகதியில் வந்து மருத்துவ சான்றிதழை பெறலாம். மேலும் மருத்துவர்கள், ஆய்வுகூட உதவியாளர்கள், மருத்துவ உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர். இதன் மூலம் நடைமுறை இலகுவாக்கப்படும் என்றார்.
Previous Post Next Post