தமிழ் தேசியக் கட்சி புதியதாக உதயம்!! -சிறிகாந்த தலமையில் அணி கூடுகிறது- - Yarl Thinakkural

தமிழ் தேசியக் கட்சி புதியதாக உதயம்!! -சிறிகாந்த தலமையில் அணி கூடுகிறது-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கங்காளி கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியில் இருந்து விலகிய மற்றும் விலக்கப்பட்டவர்கள் இணைந்து தமிழ் தேசியக் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியினை ஆரம்பித்துள்ளனர்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போது ரெலோ கட்சி எடுத்த முடிவுக்கு முரணாகச் செயற்பட்டனர் என்ற சாட்டுதலில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா உள்ளிட்ட சிலர் கட்சியிருந்து நீக்கப்பட்டனர்.

இவ்வாறு விலக்கப்பட்டவர்கள் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி ஆரம்பித்துள்ளனர்.
Previous Post Next Post