ரயிலில் யாசகம் பெறுபவர்கள் இன்று முதல் கைதாவர்கள்!! -ரயில் திணைக்களம் எச்சரிக்கை- - Yarl Thinakkural

ரயிலில் யாசகம் பெறுபவர்கள் இன்று முதல் கைதாவர்கள்!! -ரயில் திணைக்களம் எச்சரிக்கை-

ரயிலில் ஏறி பயணிகளிடத்தில் யாசகம் (பிச்சை) பெறுபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள் என்று ரயில் திணைக்களம் எச்சரிக்கை செய்துள்ளது.

ரயிலில் யாசகத்தில் ஈடுபடுபவர்களையும், அவசியமற்ற முறையில் வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபடுபவர்களையும் அதிலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தொடரூந்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

யாசகர்கள் மற்றும் அவசியமற்ற முறையில் வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் பயணிகளிடமிருந்து முறைப்பாடு கிடைத்துள்ளதாக ரயில் திணைக்கள பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்று முதல் அவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post