A/L பெறுபேறு இன்று மாலை வெளியாகும்!! - Yarl Thinakkural

A/L பெறுபேறு இன்று மாலை வெளியாகும்!!

கல்விப்பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று வெள்ளிக்கிழமை மாலை வெளியிடவுள்ளது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகளை, சுட்டெண் மாத்திரமின்றி, தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை பதிவு செய்தும் பார்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்காக 3 லட்சத்து 37 ஆயிரத்து 704 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடதக்கது.

Previous Post Next Post