தமிழரசு கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழா!! -யாழில் ஆரம்பம்- - Yarl Thinakkural

தமிழரசு கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழா!! -யாழில் ஆரம்பம்-

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழா கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று யாழ் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.

கட்சித் தலைவர் மாவை. சோ. சேனாதிராஜா கட்சிக் கொடியை ஏற்றி வைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே. துரைராஜசிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான புளொட், ரெலோ அமைப்புக்களின் தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களுமாகிய த. சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், பா. யோகேஸ்வரன், ஈ.சரவணபவன், எஸ். சிவாமோகன், என்.கோடீஸ்வரன், ஜி.சிறீநேசன், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ். மாநகர முதல்வர் இ.ஆனோல்ட், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்;ராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும்    கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Previous Post Next Post