வீதியோரமாக நின்ற காரில் 7 பிணங்கள்!! -அதிர்ச்சியில் பொலிஸ்- - Yarl Thinakkural

வீதியோரமாக நின்ற காரில் 7 பிணங்கள்!! -அதிர்ச்சியில் பொலிஸ்-

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் 7 பேர் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ மாகாணத்தில் உள்ள அங்ரா டோஸ் ரெயிஸ் நகரில் உள்ள தீயணைப்பு துறை அலுவலகம் முன்பு கார் ஒன்று நீண்ட நேரமாக கேட்பாராற்று நின்றது. இதனால் சந்தேகம் அடைந்த தீயணைப்பு துறை அதிகாரிகள் அந்த காரை சோதனை செய்தனர்.

அப்போது, காருக்குள் 7 பேர் பிணமாக கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். காருக்குள் பிணமாக கிடந்தவர்கள் யார்? அவர்கள் எப்படி கொலை செய்யப்பட்டனர்? போன்ற விவரங்கள் தெரியவில்லை.

கடந்த சனிக்கிழமை இதே பகுதியில் 2 போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே பயங்கர மோதல் நடந்ததாகவும், கொலை செய்யப்பட்ட 7 பேரும் அந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் போலீசார் கூறினர்.

எனினும், பிணங்களோடு காரை தீயணைப்பு துறை அலுவலகம் முன்பு நிறுத்திவிட்டு சென்றவர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து விட்டால் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடும் என கூறும் போலீசார், இதுகுறித்து தீவிர விசாரணையில் இறங்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post