காட்டிற்குள் 42 ஏக்கரில் கஞ்சா தோட்டம்!! -சுற்றிவளைப்பின் போது அதிர்ந்து போன எஸ்.ரி.எவ்- - Yarl Thinakkural

காட்டிற்குள் 42 ஏக்கரில் கஞ்சா தோட்டம்!! -சுற்றிவளைப்பின் போது அதிர்ந்து போன எஸ்.ரி.எவ்-

யால பிரதேசத்தின் காட்டுப் பகுதி ஒன்றில் இரகசியமான முறையில் மறைவாக பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டத்தை முற்றுகையிட்ட விசேட அதிரடிப் படையினர் அவற்றை அழித்துள்ளனர்.

குறித்த பயிர்ச்செய்கை அழிக்கப்பட்டபோதிலும் அவற்றை பயிரிட்டவர்கள் எவரும் நபரும் கைதுசெய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 42 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்ததாகவும் இவ்வாறு பயிரடப்பட்ட 8,500 க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளே அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Previous Post Next Post