மன்னாரில் துப்பாக்கிச் சூடு!! -2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு- - Yarl Thinakkural

மன்னாரில் துப்பாக்கிச் சூடு!! -2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு-

மன்னார் உயிலங்குளம் சிறுநீலாசேனை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான மாரி தர்மராசா (வயது -41) என்பவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் மலும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த குடும்பஸ்தர் மனைவி, பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், உயிலங்குளம் சிறுநீலாசனை பகுதியில் தனிமையில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையிலே குறித்த குடும்பஸ்தர் தங்கியிருந்த வீட்டிற்கு முன்பாக உள்ள வீதியில்  சுடப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

Previous Post Next Post