போலி விசாவில் வெளிநாடு போக முயட்சி!! -யாழினை சேர்ந்த 2 பேர் கட்டுநாயக்காவில் கைது- - Yarl Thinakkural

போலி விசாவில் வெளிநாடு போக முயட்சி!! -யாழினை சேர்ந்த 2 பேர் கட்டுநாயக்காவில் கைது-

ஜரோப்பிய நாட்டிற்கு போலி விசாவில் செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான இருவரும் ஈரானிய எல்லைகளின் ஊடாக ஐரோப்பிய நாடான அல்பேனியாவிற்கு செல்ல முயற்சித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து ஈரானின் டெஹேரான் நகரிற்கு செல்வதற்காக இரண்டு விமான பயணச் சீட்டுக்களை கொள்வனவு செய்ய முயன்ற போதே இவர்கள் வசமாக சிக்கியுள்ளனர்.

சந்தேகநபர்களை குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post