ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் 25,000/= அதிகரிப்பு!! -வேட்பாளர்கள் அதிகரித்ததே காரணமாம்- - Yarl Thinakkural

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் 25,000/= அதிகரிப்பு!! -வேட்பாளர்கள் அதிகரித்ததே காரணமாம்-

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கட்டுப்பணத்தை 25,000 ரூபாவால் அதிகரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் என்றுமே இல்லாதவாறு 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கட்டுப்பணம் குறைந்த அளவில் அறவிடப்படுவதன் காரணமாகத்தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது.

ஜனாதிபதித் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு 50,000 ரூபாவும், சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளருக்கு 75,000 ரூபாவும் கட்டுப்பணமாக அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தீர்மானிக்கப்பட்ட தொகை அதிகரிக்கப்பட்டால் சுயேட்சை வேட்பாளர்கள் ஒரு இலட்சம் ரூபாவும், கட்சி சார்பில் போட்டியிடுபவர்கள் 75,000 ரூபாவினையும் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
Previous Post Next Post