பளைப் பகுதியில் மணல் கொள்ளை!! -25 பேர் கைது: 25 வாகனங்களும் பறிப்பு- - Yarl Thinakkural

பளைப் பகுதியில் மணல் கொள்ளை!! -25 பேர் கைது: 25 வாகனங்களும் பறிப்பு-

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உள்பட்ட சோரன்பற்று, கிளாளி, தர்மக்கேணி மற்றும் அரக்கரதிரன பகுதிகளில் சட்டத்துக்கு முறனாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பளை பொலிஸார் தெரிவித்தனர்.

இக் கைதின் போது 15 டிப்பர் வாகனங்களும் 10 உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதிகளில் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 21 பேர் ஆள் பிணையில் விடுபட்டுள்ளதுடன் நான்கு பேர் பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post