ரீயூசன் போவதாக கூறி காதலனுடன் விடுதியில் இருந்த 14 வயது மாணவி!! -சுற்றிவளைத்து பிடித்த பொலிஸ்- - Yarl Thinakkural

ரீயூசன் போவதாக கூறி காதலனுடன் விடுதியில் இருந்த 14 வயது மாணவி!! -சுற்றிவளைத்து பிடித்த பொலிஸ்-

வீட்டில் இருந்து மேலதிக வகுப்பிற்கு செல்வதாகக் கூறிவிட்டு விடுதியில் காதலனுடன் இருந்த 14 வயது மாணவி படல்கும்பறை பொலிசாரால் இன்று செவ்வாய் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மாணவி வைத்திய அறிக்கையைப் பெறுவதற்காக அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் சிறிய தாய் படல்கும்பறைப் பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து விடுதியொன்றின் அறையில் இருந்த குறித்த  மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, மாணவியுடன் இரவு முழுவதும் இருந்த மாணவியின் காதலன் தலைமறைவாகியுள்ளார்.

மாணவியை பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியபோது தனது காதலனும், தானும் ஒன்றாகவே மேலதிக வகுப்பில் கல்வி கற்பதாகவும் அவர் எங்கிருக்கின்றார், அவரது பெற்றோர் யார் என்ற விபரங்கள் தனக்குத் தெரியாதென்றும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலதிக வகுப்பிற்குச்சென்ற நாங்கள் இருவரும் விடுதி அறையில் ஒன்றாக தங்கியிருந்ததாகவும் அதிகாலை தனது காதலன் தன்னை அறையில் இருக்குமாறு கூறிவிட்டு வெளியில் சென்றதாகவும் மாணவி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அந்த மாணவி சிறிய தாயின் பராமரிப்பிலேயே வாழந்து வருகின்றார். இச்சம்பவம் குறித்து, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் மாணவியின் காதலனை பொலிசார் தேடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post