புங்குடுதீவில் பாரிய கடற்படை முகாம் அமைக்க தீர்மானம்!! -மக்களின் 14 ஏக்கரை சுவீகரிக்க முடிவு- - Yarl Thinakkural

புங்குடுதீவில் பாரிய கடற்படை முகாம் அமைக்க தீர்மானம்!! -மக்களின் 14 ஏக்கரை சுவீகரிக்க முடிவு-

புங்குடுதீவில் பாரிய கடற்படை கட்டளை முகாம் அமைப்பதற்காக பொது மக்களின் 14 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காணி எடுத்தல் சட்டத்தின் கீழு; வேலணை பிரதேச செயலாளரினால் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு கிழக்கு துஃ24 கிராம சேவையாளர் பிரிவின் கீழ் உள்ள காணிகளுக்கே குறித்த சுவீகரிப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்லில் 14 நாள்களுக்குள் ஆட்சேபனைகளை அறியத்தருமாறு பிரதேச செயலாளரினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குமாரவேலு பொன்னம்மா, சின்னத்தம்பி இராசேந்திரன், சுப்பிரமணியம் மகேஸ்வரி, அண்ணாமலை கங்காசபை, ஐயம்பிள்ளை பாக்கியம், வேலாயுதபிள்ளை செல்லம்மா, கந்தையா தியாகராசா, இராசையா கோணேசலிங்கம், பஞ்சாசரம் தயாபரன, செல்வராசு அம்பிகா ஆகியவர்களின் காணிகளுக்கே முற்படி சுவீகரிப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post