O.L பரீட்சைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பம்!! - Yarl Thinakkural

O.L பரீட்சைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பம்!!

2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளது என் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இப்பரீட்சை தொடர்ந்து டிசம்பர் 12 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த முறை பரீட்சைகள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள நான்காயிரத்து 987 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளன.

அத்துடன் 17,008 பேர் க.பொத.சா. தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post