கூட்டமைப்பின் சஜித்திற்கு ஆதரவு கூட்டத்தில் குழம்பம் விளைவித்தவர் கைது!! - Yarl Thinakkural

கூட்டமைப்பின் சஜித்திற்கு ஆதரவு கூட்டத்தில் குழம்பம் விளைவித்தவர் கைது!!

யாழில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்ப்பாட்டில் நடந்த கூட்டத்தில் குழப்பம் விளைவிக்க முணைந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று புதன்கிழமையில் மாலை நல்லூர் கிட்டுப்பூங்காவில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரச்சார கூட்டம் நடை பெற்றது.

இக்கூட்டத்திற்க்கு வந்த நபர் ஒருவர் தகாத வர்த்தைகளை பேசி அங்கிருந்தவர்களை முகம்சுளிக்க வைத்தார்.

அவருடைய அனாகரிக செய்ற்ப்பாட்டை அடுத்து அங்கிருந்த பொலிஸார் அவரை எச்சரித்துள்ளனர்.

இதன்போது பொலிஸாருடன் முரண்பட்ட அவர் கூட்டத்தில் இருந்து புறப்பட்டு வெளியே சென்றுள்ளார்.

அங்கிருந்து புறப்பட்ட அவரை கிட்டுப்பூங்காவிற்க்கு பின்புறமாக வைத்து வழிமறித்த வீதி போக்குவரத்து அவரிடம் விசாரணை நடத்தினர். இதன் போது குறித்த நபர் மதுபோதையில் இருப்பது கண்டறியப்பட்டது.

உடனடியாக அவரை கைது செய்த பொலிஸார் அவரின் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து சென்றார்.
Previous Post Next Post