சஜித் தோற்றதிற்கு நான் காரணமில்லை!! -காரணம் தேட வேண்டும் என்கிறார் ரணில்- - Yarl Thinakkural

சஜித் தோற்றதிற்கு நான் காரணமில்லை!! -காரணம் தேட வேண்டும் என்கிறார் ரணில்-

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசா தோற்றதற்கு நான் காரணமில்லை என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவரின் வெற்றியை வலுவிழக்க செய்ததாக தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை முற்று முழுதாக நிராகரிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளதாக சுட்டிக்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் கூறுகையில், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் நியமிக்கப்பட்டதன் பின், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை அவர்களிடம் ஒப்படைத்தேன்.

கட்சி தலைமையகமான சிறிகொத்த தனது கடமைகளையும், பொறுப்புக்களையும் சிறந்த முறையில் முன்னெடுத்துள்ளது.

சிங்கள பௌத்த மக்களின் வாக்குகள் கிடைக்கப்பெறாமைக்கான காரணங்களை கண்டறிய வேண்டும்.

ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி கொண்டிருப்பதில் பயனில்லை. பௌத்த மாநாயக்க தேரர்களின் ஆசீர்வாதத்துடன் சரியான பௌத்த கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

அத்துடன், நிதி விவகாரங்கள் தொடர்பில் தமக்கு சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Previous Post Next Post