கூட்டமைப்பின் கூட்டத்தில் குழப்பம்!! -கைதானவரை உளநலத்தை சோதிக்க நீதிமன்று உத்தரவு- - Yarl Thinakkural

கூட்டமைப்பின் கூட்டத்தில் குழப்பம்!! -கைதானவரை உளநலத்தை சோதிக்க நீதிமன்று உத்தரவு-


நல்லூர் கிட்டுப் பூங்காவில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் குழப்பம் விளைவித்த நிலையில் கைது செய்யப்பட்டவரை உளநலத்தை பரிசோதிக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நேற்று புதன்கிழமையில் மாலை நல்லூர் கிட்டுப் பூங்காவில் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டம் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் குழப்பம் விளைவித்த நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் இன்று முற்படுத்தப்பட்டார்.

அவருக்கு எதிராக மதுபோதையில் வாகனம் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் குற்றப்பத்திரம் பொலிஸாரால் முன்வைக்கப்பட்டது. அவருக்கு குற்றப்பத்திரம் வாசித்துக் காண்பிக்கப்பட்டது. எதிரி குற்றவாளி என மன்றுரைத்தார்.

எதிரியின் உளநலம் தொடர்பில் கண்டறிவதற்காக அவரை தெல்லிப்பளை வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்தி படிவம் 414இல் மன்றுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.
Previous Post Next Post