சவுதி விபத்தில் இலங்கை இளைஞர் பலி!! - Yarl Thinakkural

சவுதி விபத்தில் இலங்கை இளைஞர் பலி!!

சவுதியில் உள்ள மக்காஹ் - ஹிரா பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குருநாகல், பம்மண பகுதியை சேர்ந்த முஹமட் சலா{ஹதீன் முஹமட் சதாம் (ஆளுஆ ளுயனயஅ) (24) என்ற இளைஞர் இன்று அதிகாலை மக்காஹ், ஹிரா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் சவுதி அல்மராய் கம்பனியில் தொழில் புரிந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சடலத்தை இலங்கை கொண்டு வருவது தொடர்பில் கவனம் செலுத்துப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post Next Post