யாழில் பாடசாலை மாணவியை தீண்டிய பாம்பு!! - Yarl Thinakkural

யாழில் பாடசாலை மாணவியை தீண்டிய பாம்பு!!

யாழ்.நகரில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் சிரமதான பணியில் ஈடுபட்டிருந்த மாணவியை விசப் பாப்பு தீண்டியதை அடுத்து அவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையில் காலையில் இடம்பெற்ற சிரமதானத்தின்போதே இவ்வாறு பாம்புக் கடிக்கு இலக்கானபோதும் சுமார் இரண்டு மணி நேரங்களின் பின்னர் மாணவிக்கு ஏற்பட்ட மாற்றம் காரணமாக சந்தேகம் கொண்டு வைத்தியசாலைக்கு கூட்டிச் செல்லப்பட்டார்.

அதன்பின்பு மேற்கொண்ட தேடுதலின்போது பாம்பு கடிக்கு இலக்கானமை கண்டறியப்பட்டது.

இதனால் பாடசாலையில் உள்ள புற்களை பிடுங்கி அகற்றிய சமயம் இடம்பெற்ற சிரமதானத்தின்போது குறித்த பாம்பு தீண்டியிருக்கலாம் என கருதப்படுகின்றது.

இதேநேரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி தற்போது பாதிப்பின்றி உள்ளதாக வைத்தியசாலைத் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post