கோத்தாவிற்கு பகிரங்க சவால் விடுத்த சம்மந்தன்!! - Yarl Thinakkural

கோத்தாவிற்கு பகிரங்க சவால் விடுத்த சம்மந்தன்!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாய ராஜபச்சவிற்கு பகிரங்க சவால் ஒன்றை விடுத்ததுடன், அவரை எச்சரிக்கையும் செய்துள்ளார்.

சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகள் இல்லாமல், தனியே பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் தான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற கோத்தாபாய ராஜபக்சவின் அறைகூவல் தொடர்பிலேயே இரா.சம்மந்தன் கோத்தாபாயவை நோக்கி சவால் விடுத்துள்ளார்.

குறிப்பாக மேற்கண்டவாறு கூறிய கோத்தா இயலும் என்றார் பெரும்பான்மை இனத்தவரின் வாக்கினை மட்டும் வைத்து வென்று பாருங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.

சாவகச்சேரியில் நேற்று ஞாயிற்றுக் கிழமை மாலை வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.சஜந்தன் தலமையில் நடைபெற்ற அமரர் ரவிராஜ்சின் நினைவு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:-

இப்போது கூறுகின்றார்களாம் தமக்கு சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகள் தேவை இல்லை.

பெரும்பான்மை இனத்தவர்களின் வாக்குகளால் மட்டும் தாங்கள் வெல்வோம் என்று. உண்மையிலேயே அவ்வாறு கூறினார்களோ எனக்கு தெரியவில்லை. ஏலும் என்றார் செய்யுங்கள்.

பெரும்பான்மை இனத்தவரின் வாக்குகளை மட்டும் வைத்து வெல்லுங்கள்.

எம்மை மிரட்டி, எம்மை அதட்டி நீங்கள் எதனையும் அடைய முடியாது. அதனை அடைவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம் என்றார்.
Previous Post Next Post