சஜித்தை எதிர்க்கட்சி தலைவராக்க நான் கோரவில்லை!! -கூறுகிறார் சம்பந்தன்- - Yarl Thinakkural

சஜித்தை எதிர்க்கட்சி தலைவராக்க நான் கோரவில்லை!! -கூறுகிறார் சம்பந்தன்-

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சஜித்திற்கு விட்டுக் கொடுக்குமாறு நான் ஒரு போதும் தெரிவிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்குவதற்கு ரணில் விக்ரமசிங்க இடமளிக்க வேண்டும் என இரா.சம்பந்தன் கூறியதாக சில ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

அந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. இதுவரையில் எதிர்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் நான் இதுவரை எந்த கருத்தினையும் தெரிவிக்கவில்லை. அவசியம் ஏற்படுமாயின் கருத்து தெரிவிப்பேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்
Previous Post Next Post