பொலிஸ் பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு!! - Yarl Thinakkural

பொலிஸ் பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு!!

இலங்கையின் 8 வது  ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்டத்தின் வாக்கு எண்ணும் நிலையமான யாழ்.மத்திய கல்லூரியிலிருந்து இருந்து அனைத்து வாக்குச்சாவடிகளுக்குமான வாக்கு பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படுகின்றன.

யாழ் மாவட்டத்தில் 531 வாக்களிப்பு நிலையங்களில் 475,176  பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குபெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில்  பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படுகின்றன.

இதேவேளை தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதனை காணக்கூடியதாக உள்ளதுடன் அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்குடன் விசேட அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post